Put some informations about your eshop here (address, contacts etc.)

இஸ்லாமியப் பார்வையில் போலித்தனம்- (ريا) ரியா-1

இஸ்லாமியப் பார்வையில் போலித்தனம்- (ريا) ரியா
(ஜித்தா பலதில் 26.02.2010ல் ஜித்தா ஸினாயிய்யா, இஸ்லாமிய தஃவா மையம் நடத்திய மார்க்க விழாவில் டாக்டர் அஹ்மத் பாக்கவி ஆற்றிய உரையின் சுருக்கம்)

நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியதலைப்பு.

மனிதனை வீழ்த்தும் ஒரு கொடிய நோய்! அதுமட்டுமல்ல, மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கும் மறைமுகமான நச்சுப்பொருள்.

இன்று,

01. சொல்லிலே போலித்தனம்
02. செயலிலே போலித்தனம்
03. வணக்கத்திலே போலித்தனம்
04. வழிபாடுகளிலே போலித்தனம்
05. வியாபாரத்தில் போலித்தனம்
06. அளவையிலே போலித்தனம்
07. நிறுவையிலே போலித்தனம’
08. கொடுக்கல் வாங்கலிலே போலித்தனம்
09. தொழிலிலே போலித்தனம்
10. குடும்பத்திலே போலித்தனம்
11. வாழ்க்கையிலே போலித்தனம்
12. தாவா வகுப்புகளுக்கு வருவதிலே போலித்தனம். நேரமிருந்தும தட்டிக்கழிப்பது.
13. இதில் வேறு! இங்கே நடைபெறும் எல்லா வகுப்புகளுக்கும் தவறாது சென்று வருகிறோம் என்று பெருமையாக வேறு பேசிக்கொளவார்கள். ஏதாவது மார்க்க விளக்கம் கேட்டால் தெரியாது விழிப்பார்கள்.
14. நமது மார்க்க அறிஞர் ஷைகு அழைத்துவிட்டாரே! அவருடைய முகத்துக்காக வருவதாகக் கூறுவார்கள். ஆனால்,அது அல்லாஹ்வுக்காக அல்ல. இதுவும் போலித்தனமில்லையா?

15. சுருக்கமாகச் சொன்னால்

எங்கும் போலித்தனம்
எதிலும் போலித்தனம் !

Beware of dogs நாய்கள் ஜாக்கிரதை என்று சில வீட்டு வாசல்களில் போர்டு (விளம்பரப்பலகை) தொங்கவிட்டிருப்பார்கள். அதுபோல ‘போலிகள் ஜாக்கிரதை‘ என்று போரடு போடுமளவுக்கு போலிகள் மலிந்துவிட்டார்கள்;.

போலித்தனத்தின் மறு பெயர்

பகட்டு, பந்தா, பாசாங்கு, நடிப்பு, ஏமாற்று, மோசடி, பித்தலாட்டம், முகஸ்துதி, நயவஞ்சகம் இத்தனை பொருளையும் உள்ளடக்கியது தான் அரபியில் ‘ ரியா’. எனப் பொருள் விரிகிறது.

ஆங்கிலத்திலே Falsehood, Hipocracy, Insincerity எனச் சொல்லப்படும்

உண்மைக்கு மாறாக
சத்தியத்திற்கு மாறாக
இயற்கைக்கு மாற்றமாக
யதார்த்தமான நிலைக்கு மாற்றமாக நடப்பதற்கே போலித்தனம் எனப்படும்

சுருக்கமாக எங்கே இக்லாஸ் (தூய நோக்கம்) இல்லையோ அது போலித்தனம்!
எங்கே தக்வா (இறையச்சம்) இல்லையோ அது போலித்தனம்!

அற்புதம், அதிசயம் என்ற பெயரால் போலித்தனங்கள்.

நீங்களெல்லாம் அடிக்கடி இணைய தளத்திலும் தொலைக்காட்சியிலும் அற்புதம், அதிசயம் என்ற பெயரில் சில அபூர்வமான படங்களைப் பார்த்து மலைத்துப் போயிருப்பீர்கள்.அது என்ன வென்று கேட்கிறீர்களா?

1. விதையில் ‘அல்லாஹ்’ என்ற எழுத்து.
2. கத்தரிக்காயில் ‘அல்லாஹ்’ என்ற எழுத்து.
3. தர்பூசணியில் ‘அல்லாஹ்’ என்ற எழுத்து.
4. தேன் கூட்டில் ‘அல்லாஹ்’ என்ற எழுத்து.
5. தக்காளியில் ‘அல்லாஹ்’ என்ற எழுத்து.
6. மீனில் ‘அல்லாஹ்’ ‘முஹம்மத்’என்ற எழுத்து.
7. மரக்கிளைகள் ‘ லா இலாஹ இல்லல்லாஹ்’ என்கின்றன.
8. மரம் ருகூஃ செய்கிறது.
9. மேகக் கூட்டங்கள் ‘ அல்லாஹ்’ என்கின்றன.

அல்லாஹ் ஒருவன் தான் என்ற தன் வல்லமைக்கு சான்றாக அல்லாஹ் கூறுவதைப் பாருங்கள்.

1-وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَكُم مِّن تُرَابٍ ثُمَّ إِذَا أَنتُم بَشَرٌ تَنتَشِرُونَ
2.وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجاً لِّتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُم مَّوَدَّةً وَرَحْمَةً إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِّقَوْمٍ يَتَفَكَّرُونَ 3.وَمِنْ آيَاتِهِ خَلْقُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَاخْتِلَافُ أَلْسِنَتِكُمْ وَأَلْوَانِكُمْ إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِّلْعَالِمِينَ 4.وَمِنْ آيَاتِهِ مَنَامُكُم بِاللَّيْلِ وَالنَّهَارِ وَابْتِغَاؤُكُم مِّن فَضْلِهِ إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِّقَوْمٍ يَسْمَعُونَ 5.وَمِنْ آيَاتِهِ يُرِيكُمُ الْبَرْقَ خَوْفاً وَطَمَعاً وَيُنَزِّلُ مِنَ السَّمَاءِ مَاءً فَيُحْيِي بِهِ الْأَرْضَ بَعْدَ مَوْتِهَا إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِّقَوْمٍ يَعْقِلُونَ 6.وَمِنْ آيَاتِهِ أَن تَقُومَ السَّمَاء وَالْأَرْضُ بِأَمْرِهِ ثُمَّ إِذَا دَعَاكُمْ دَعْوَةً مِّنَ الْأَرْضِ إِذَا أَنتُمْ تَخْرُجُونَ 7.وَمِنْ آيَاتِهِ أَن يُرْسِلَ الرِّيَاحَ مُبَشِّرَاتٍ وَلِيُذِيقَكُم مِّن رَّحْمَتِهِ وَلِتَجْرِيَ الْفُلْكُ بِأَمْرِهِ وَلِتَبْتَغُوا مِن فَضْلِهِ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ
அர்ரூம :7 வசனங்கள் (30: 20,21,22,23,24,25,46)

8.وَمِنْ آيَاتِهِ اللَّيْلُ وَالنَّهَارُ وَالشَّمْسُ وَالْقَمَرُ لَا تَسْجُدُوا لِلشَّمْسِ وَلَا لِلْقَمَرِ وَاسْجُدُوا لِلَّهِ الَّذِي خَلَقَهُنَّ إِن كُنتُمْ إِيَّاهُ تَعْبُدُونَ9.وَمِنْ آيَاتِهِ أَنَّكَ تَرَى الْأَرْضَ خَاشِعَةً فَإِذَا أَنزَلْنَا عَلَيْهَا الْمَاء اهْتَزَّتْ وَرَبَتْ إِنَّ الَّذِي أَحْيَاهَا لَمُحْيِي الْمَوْتَى إِنَّهُ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ 10.وَمِنْ آيَاتِهِ خَلْقُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَا بَثَّ فِيهِمَا مِن دَابَّةٍ وَهُوَ عَلَى جَمْعِهِمْ إِذَا يَشَاءُ قَدِيرٌ 11.وَمِنْ آيَاتِهِ الْجَوَارِ فِي الْبَحْرِ كَالْأَعْلَامِ
(41:37,39. 42:29,32) போன்ற வசனங்களில்

விண்ணையும்,மண்ணையும்,சூரியனையும்,சந்திரனையும். இரவையும்,பகலையும், கடலையும் காற்றையும்,ஆணையும் பெண்ணையும் படைத்திருப்பதும்,பலமொழிகளையும்,வண்ணங்களை யும் படைத்திருப்பதும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளல்லவா? இதற்கு மேல் என்ன சான்று (Proof) வேண்டிக்கிடக்கிறது?

1. விதையிலும் 2. கத்தரிக்காயிலும.
3. தர்பூசணியிலும்; 4. தேன் கூட்டிலும்.
5. தக்காளியிலும் 6. மீனிலும்.
7. மரக்கிளைகளையிலும் 8. மேகக் கூட்டங்களிலும் ‘ அல்லாஹ்’

என்ற எழுத்தை எழுதி அல்லாஹ் என்று நிரூபிக்க வேண்டிய அவசியமே இல்லை.

அடுத்து,
இவையெல்லாம் உண்மை தானா ? என்று சற்று ஆராய்ந்த போது இதன் போலித்தனம் வெளியானது. பொறியியல் பட்டதாரியான. என் மகள் இதுபற்றிய உண்மைகளை கண்டறிய பலருக்கும் மெயில் அனுப்பினாள். அதன் பின்னர் தான் உண்மை தெரியவந்தது. எகிப்து நாட்டைச் சார்ந்த அவளுடைய தோழியின் சகோதரர் ருகாயீ அல்காமில் என்பவர் அதற்கு பதிலனுப்பினார். அந்த பதில் மிகவும் அதிர்ச்சியைத் தந்தது.

அந்த பதில் மெயிலில்

முதலில் நீங்கள் குறிப்பிட்டபடி ‘அல்லாஹ் ஒருவன் இருக்கிறான் என்பதற்கு இது போன்ற நுஒவசய pசழழக அதிகப்படியான சான்றுகள் தேவையில்லை. இஸலாமியப் பிரச்சாரத்திற்கு ‘ஒரு முஸ்லிமின் வாழ்வும், முன்மாதிரியும்,நன்னடத்தையுமே போதுமானது’ என்று குறிப்பிட்டுவிட்டு பின்வரும் செய்தியையும் எழுதியிருந்தார்.

‘நீங்கள் விசாரித்த படங்கள் எகிப்தில் பல இடங்களில் பரபரப்பாக விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு நாள் எனது உறவினர் ஒருவர் இதுபோன்ற ஒரு அதிசயப் படத்தை வாங்கிவந்து வானளாவப் புகழத்தொடங்கினார்.. உடனே நான் ‘நீங்கள் உண்மையிலேயே அல்லாஹ்வை நம்புவதாயிருந்தால் இப்படிப்பட படங்களெல்லாம் அவசியமில்லையே! என்றேன. அதற்கவர் “இதுவெல்லாம் ஒரு அதிசயம் தானே! “என்றாராம்.

சில வாரங்களுக்குப்பிறகு எங்கள் நாட்டு வானொலியில் எனக்கு மிகவும் அறிமுகமான டாக்டர் ஸயீது அல்குலரி பேசினார். அவர் மக்களிடையே செலவாக்குப் பெற்ற ஒரு மருத்துவர்.; பொழுது போக்குக்காக ஓய்வு வேளைகளில் அழகிய காட்சிகளை தத்ரூபமாக படங்களாக வரையும் ஓர் ஆர்டிஸ்டு. அவர் தமது வானொலி உரையில் கூறினார். யாரோ என்னுடைய படங்களில் சிலவற்றை திருடிக்கொண்டு மக்களிடையே விற்பனை செய்கிறார். அதை விறபனை செயபவர் யாரென்றே எனக்குத் தெரியவில்லை. அதுபற்றி எனக்குக் கவலையுமில்லை. ஆனால் அந்தப் படங்கள் இஸலாத்தைப் பற்றியும்,முஸ்லிம்களைப்பற்றியும் தவறான எண்ணங்களை ஏற்படுத்துவதாக உள்ளது.. அது மட்டுமன்றி இதுபோன்றவைகளை நம்பக்கூடியவர்களைப்பற்றி முட்டாள்கள் என்று மக்கள் முத்துரை குத்துவார்களே! என்றும் இதை நம்பவேண்டாம் என்றும் அவர் உரையில் குறிப்பிட்டார்.

நான் கேட்டவைகளை என்னால் நம்பவே முடியவில்லை. மறுநாள் அவரது ( யுசவ புயடடநசநைள) ஆர்ட்டு கேல்லரிக்கு-படக்காட்சி சாலைக்குச் சென்று இருபடங்களை வாங்கி வந்தேன். அவற்றில் டாக்டரின் கையெழுத்துமிருந்தது.; அப்போது தான் அவரே அதை வரைந்திருக்கிறார் எனபதை நம்ப முடிந்தது.

என்ற செய்தியைக் குறிப்பிட்டுவிட்டு, தயவு செய்து இந்தப்படங்களை உங்கள் வெப்ஸைடடிலிருந்து அகற்றிவிடுங்கள். இதை எவருக்கும் அனுப்பாதீர்கள் என்றும் வேண்டியிருந்தார்.

எனவே மக்களின் நம்பிக்கைகளுடன் விளையாடும் இது போன்ற பேலித்தனங்களை
இனம் கண்டு நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும’.

அடுத்து நமது அன்றாட வாழ்வில் காணும் போலித்தனங்களைப் பாருங்கள்!

போலியாகச் சிரிப்பது :

உள்ளத்தால் சிரிக்காமல் உதட்டளவில் சிரித்து வரவேற்பதும் போலித்தனமாகும்..
வரவேற்பதும் கூட அன்பில்லாமல் ஒரு சம்பிரதாயத்த்ற்காக (குழசஅயடவைநைள) வெறுப்போடு உபசரிப்பார்கள்.
விருந்துபசாரம் : வாங்க வாங்க என்பார்கள் வேண்டா வெறுப்பாக! அது செயற்கையான உபசரிப்பாக இருக்கும்;. செல்வந்தர்கள்,ஏஐP க்கள் வந்தால் விழுந்து விழுந்து உபசரிப்பார்கள்.

சற்று பொருளாதாரத்தில் குறைந்தவர்களாக – ஏழைகளாக இருந்தால் கண்டுகொள்ளவே மாட்டார்கள். இவையெல்லாம் போலித்தனமில்லையா?

கடன் வாங்கியாவது ஒன்றைச் செய்வது
தனது தகுதிக்கு மேல் ஒரு நிகழ்ச்சியை நடத்துவது அல்லது திருமணத்தை நடத்துவது இவையெல்லாம் மார்க்கத்திற்கு முரணானது. இதற்காக பெரும் தொகையை கடனாக வாங்கி செலவு செய்வதும் போலித்தனம் இல்லையா?

விருந்திலே அறைகுறையாக உண்ணுவது
விருந்துக்குச் சென்று பந்தியலே அமர்ந்து உண்ணும்போது பசியிருந்தும் பிறர் ஏதாவது நினைத்துக்கொளவார்களோ என உண்ணாமல் இடையிலே எழுந்திருப்பார்கள். பிறருக்காக உண்ணாமல் எழுந்திருப்பதும் போலித்தனமில்லையா? (ஈவொரா)

இல்லாமலிருந்தாலும் இருப்பதாகக் காட்டுவது
ஒரு செயலை விளம்பரப்படுத்துவது (சுவரொட்டி,யனஎநசவளைநஅநவெஇpயிநச)
பெயருக்காக புகழுக்காக,ஹஜ்ஜிலே கஃபாவுக்கு மிக அருகிலே சொகுசான அக்காமெடேசன் உள்ளது என விளம்பரப்படுத்திவிட்டு மிகவும் தூரத்திலே அக்காமெடேசன் கொடுப்பது போலித்தனமில்லையா? ஏமாற்று இல்லையா?

அலங்காரமாகக் காட்டுவது
வீட்டு முகப்பிலே அலங்காரம் செய்திருப்பார்கள். ஆனால் உள்ளே சென்று குளியலறை (டீயவாசழழஅ)அடுப்படி (முவைஉhநn) ஐப் போய் பார்த்தால் பார்ப்பதற்கு சகிக்காது. இதுவெல்லாம் பகட்டு இல்லையா? போலித்தனமில்லையா?

பெண்களின் பகட்டுகள்
உடல் வனப்பை பிறர் கண்களில் படாமல் பாதுகாப்பதற்கு ஹிஜாப்-பர்தா அணிகிறோம்.
ஆனால், பர்தா அணிந்தாலும் உள்ளே உள்ள ஆடைகள் வெளியே தெரியுமாறும் சாரியின் பட்டு ஜரிகைகள், பார்டர்கள், பட்டுத்துணியின் தரம் வெளியே தெரியுமாறும் பட்டன்களை அவிழ்த்துவிடுவதும் பகட்டு இல்லையா? போலித்தனமில்லையா?

பர்தா அணிந்தும் உள்ளே கிடக்கும் மாலை, நகை நட்டை பர்தாவுக்கு வெளியே காட்டுவது போலித்தனமில்லையா? பர்தா அணிவதே உள்ளே இருப்பது வெளியே தெரியாமலிப்பதற்குத்தான்!

பெண்கள் தலை முக்காடிட்டிருப்பார்கள். ஆனால் அது தலையின் எந்த பகுதியையும் மறைக்காது. தலைமுடியெல்லாம் வெளியே தெரியுமளவுக்கு (வுhiஉம காக ) பருமனாக இல்லாது மிகவும் மெல்லியதாக கண்ணாடி போலிருக்கும்.உடல் அழகை வெளியே காட்டாது உடலை மறைக்காது உடல் வனப்புகளை- பரிமாணங்களை- அந்நியவருக்குக் காட்டுவதும் பகட்டாகு இல்லையா? போலித்தனமாக இல்லையா?

கடமையில் அலட்சியம் செய்வதும்; போலித்தனமே!

குடும்பத்தோடிருப்பதே கணவன், பிள்ளைகளைக் கவனித்து
வாய்க்கு ருசியாக சமைத்து வீட்டை பராமரிப்பதற்குத்தான்!.

இவ்வாறில்லாது எந்த வேலையையும் செய்யாது பகலெல்லாம் தூங்கிவிட்டு கணவனிடம் வெளியிலிருந்தும் ஓட்டலிலிருந்தும் உணவுவகைகளை வாங்கி வரச்செய்து உண்ணுவதும் ஓட்டலில் போய் சாப்பிடுவதும் சோம்பேறித்தனமான வாழ்கையாக இல்லையா? உண்மையான குடும்ப வாழ்வாக ஆகாதல்லவா?இவையெல்லாம் போலித்தனமாக இல்லையா?

இது போதாதென்று எனக்கு பாத்திரம் கழுவும் வேலைகூட இல்லையென்று பந்தாவாகப் பெருமையடித்துப் பேசுவதும் போலித்தனமில்லையா?

இவையெல்லாம், “ஓரிஜினல் நகைகளை தம்மிடம் வைத்துக் கொண்டு கவரிங் நகைகளை அணிவது போலத்தான்!சொந்த காரை வைத்துவிட்டு, டாக்ஸியிலே பயணம செய்வது போலத்தான! வீட்டிலே எல்லா வசதியும் பெற்றிருந்தும் ஓட்டலில் சாப்பிடுவதும் போலித்தனமாக இல்லையா?

தலைமறைவாக நடப்பது
கடமைகளைச் செய்யாது ஒளிந்து கொள்வதும், தவறுகளை செய்துவிட்டு வெளிவராமல் தலைமறைவாக இருப்பதும் போலித்தனமில்லையா?

வெளிச்சத்திற்கு வராமல் ஒளிவது
பொதுவாக அரசியல் வாதியும் அயோக்கியனும் (போலிகளும்) வெளிச்சத்துக்கு வரப்பயப்படுவார்கள். சத்தியத்திற்காக,நல்லறங்களுக்காக, இறைப்பணிகளுக்காக அழைத்தால் ஒளிநது கொள்வார்கள். இதுவும் போலித்தனமில்லையா?

கலப்படம்
அரிசியிலே கலப்படம்! சீனியிலே கலப்படம் ! மசாலாக்களில் கலப்படம்! உணவு வகைகளில் எல்லாம் கலப்படம்! இவையெல்லாம் போலித்தனமில்லையா ?
விலையிலே போலித்தனம்: 10 ரியால் பொருளை 9.99 என்றோ 9.95 என்றோ எழுதுவார்கள். 100 ரியால் பொருளை 99.95 ரியால் என்று எழுதுவார்கள். இதுவும் ஒருவகையான போலித்தனமல்லவா?

இவ்வாறு வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் போலித்தனங்களைப் பார்க்கிறோம். இவையெல்லாம் நடிப்பாக பகட்டாக போலித்தனமான செயல்களாகக் கருதுகிறது இஸ்லாம்.எதிலும் உண்மையாக, நேர்மையாக நடப்பது தான் விசுவாசிகளின் அடையாளமாகும.

மக்கள் எதைச் செய்தாலும் அவர்களிடம் போலித்தனத்தையே காணமுடிகிறது. பேரும் பெருமையும் தான் அவர்களுக்கு முக்கியம்.

ஒருசெல்வந்தர் மிக உயர்ந்த நறுமணம் (Pநசகரஅந) ஒன்றை பூசிக்கொண்டு ஜும்ஆத் தொழுகைக்குச் சென்றார்.அங்கே அவர் பூசிவந்த விலையுயர்ந்த அத்தரைப்பற்றி எவருமே கண்டு கொள்ளவில்லை. விசாரிக்கவுமில்லை. யாருமே விசாரிக்காததால் தாமே அதுபற்றி எப்படியாவது விளம்பரப்படுத்தி ஒரு பாராட்டுதலைப் பெற்றுவிடவேண்டும் என விரும்பிய அவர் ஒரு உபாயம் செய்தார்.

அருகிலிருந்தவர்களிடம் அத்தர் நன்றாக மணம் கமழுகிறதே! என்றார். ஆம்!நன்றாக மணக்கிறது என்றார்கள் அருகிலிருந்தவர்கள்.பின்னர் யார்பூசிவந்துள்ளார்கள் என ஒருவருக்கொருவர் எனக் கேட்கத தொடங்கினார்கள்.அதன்பிறகு இது தான் சந்தர்ப்பம் என பெரியவர் தன் பெருமையை பறைசாற்ற ‘நான் தான் பூசிவந்திருக் கிறேன்’ என்றாரே பார்க்கலாம்.

எல்லோரும் கொல்லென சிரித்துவிட்டார்கள். ஒரு அத்தருக்கே இத்துணை விளமபரம் என்றால் இதைவிட பெரிதாக ஏதேனும் செய்திருந்தால் எப்படியெல்லாம் விளமபரப்படுத்தியிருப்பார் என சிந்தித்துப் பாருங்கள். இது தான உலகம்!
03/03/2011 01:15:39
mohamed
Please retype the anti-spam code "1633"
அவர் தம் இச்சைப்படி (எதையும்) பேசுவதில்லை. அது அவருக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டதேயன்றி வேறில்லை. அல்குர்ஆன் 53:3-4
Name
Email
Comment
Or visit this link or this one