Put some informations about your eshop here (address, contacts etc.)

இறைதூதர்களை எதிர்த்தோரின் தண்டனைகள்

1. நூஹ்
நூஹ்நபியின் கூட்டத்தினர் தூபான் என்னும் பெரு வெள்ளத்தால் அழிந்தனர். (ஆதாரம் : அல்-குர்ஆன்: 29:14)
2.ஹூத் நபியின் ஆது கூட்டத்தார் ஏழு இரவுகளும் 8 பகல்களும் தொடர்ந்து பேரொலியோடு வேகமாகச் சுழன்று அடித்த கொடுங்காற்றினால் சுவடே தெரியாமல் அழிக்கப்பட்டனர் (ஆதாரம்: அல்-குர்ஆன்: 46:24,25) (69:6,7)
3. ஸாலிஹ் நபியின் தமூத் கூட்டத்தார் எச்சரிக்கப்பட்ட பின்னர் மூன்று நாள்கள் கெடுவில் வானத்திலிருந்து ஏற்பட்ட இடிமுழக்கங்களால் மாண்டு அதிகாலையில் பிணங்களாகக் கிடந்தனர். (ஆதாரம்: அல்-குர்ஆன் 11:67)

4. லூத் நபியின் மக்கள் செங்கல் மழை பொழியப்பட்டு ஜிப்ரீல் (அலை) அவர்கள் மூலம் ஊரையே தலைகீழாக கவிழ்க்கப்பட்டது. (ஆதாரம்: அல்-குர்ஆன் 11:82,83)

4. மூஸா நபியின் எதிரியான பிர்அவனும் அவனது படையினரும் (பனீ இஸ்ரவேலர்கள்) செங்கடலில் மூழ்கடிக்கப்பட்டனர். (ஆதாரம்: குர்ஆன் 11:67)

5. ஷுஐப் நபியின் மத்யன் வாசிகளும் அய்கா வாசிகளும்; பூகம்பத்தாலும், கடும் இடி முழக்கத்தாலும் அழிக்கப்பட்டனர். (ஆதாரம்: அல்குர்ஆன்: 11:94)

6. தாவூது நபியின் அய்லா கூட்டத்தார் (அஸ்ஹாபுஸ்-ஸப்து) குரங்குகளாக மாற்றப்பட்டு மூன்று நாட்களுக்குப் பின்னர் மாண்டனர். ( 7:163)

7. அஸ்ஹாபுர் ரஸ் (கிணற்று வாசிகள்) காற்றால் தூக்கிச் செல்லப்பட்டு கடலில் மூழ்கடிக்ககப்பட்டனர்.(25:38,50:12)

8. இல்யாஸ் நபியின் கூட்டத்தினர் (பனீ இஸ்ரவேலர்களில் சிலர்) வானத்திலிருந்து இறங்கிய நெருப்பால் எரிக்கப்பட்டனர்.

9. அஸ்ஹாபுல் உக்தூத் (நெருப்புக் குண்டத்திற்குரியோர்) நம்பிக்கை கொண்டோரை குண்டத்தில் வீசி எறிந்து அவர்களை எரித்த அதே நெருப்பினாலேயே எரிந்து சாம்பலாயினர். ஆதாரம்: அல்குர்ஆன்: 85: 4,5,6,7)

10. அஸ்ஹாபுல் கர்யத் (அந்தாகியா என்னும்) கிராம மக்கள் அடுத்தடுத்து வந்த மூன்று இறைதூதர்களையும் நம்பாது அவர்ளை விரட்டியடித்ததாலும், அவர்களுக்காக பரிந்துரைக்க வந்த நல்லடியார் ஹபீபுந்நஜ்ஜாரையும் அடித்துக் கொன்றதாலும் அம்மக்கள் ஒரேயொரு இடிமுழக்கத்தால் அழிக்கப் பட்டார்கள்.(ஆதாரம் அல்-குர்ஆன்: யாஸீன் 36:13-29)

11. தாவூது நபியின் அய்லா கூட்டததினர் குரங்குகளாக மாற்றப்பட்டு மூன்று நாட்களுக்குப்பின்னர் மாண்டனர். (ஆதாரம் : அல்குர்ஆன் 2:65)

12. காரூன் என்னும் ஆணவக்காரன் மூஸாநபியின் குடுமபத்தைச் சார்ந்தவன். பல கோடிகளுக்கு அதிபதியாக இருந்த மிகப் பெருஞ் செல்வந்தன். இவனது ஆணவத்தாலும் இறைமறுப்பாலும் இவனையும் இவனது செல்வங்களையும் பூமி விழுங்கிவிட்டது. (ஆதாரம் : அல்குர்ஆன் 28: 76:82)

13. ஹாமான் ஃபிர்அவனின் முதல் அமைச்சனாவான். காரூனும் இவனும் சேர்ந்து தான் பனீ இஸராயீலின் ஆண்குழந்தைகளை கொன்றொழிக்குமாறு ஃபிர்அவனிடம் கூறினர்.மூஸா(அலை) அவர்களின் அறிவுரைகளைக் கேட்காது பிர்அவ்னைத் தடுத்தவனும் இவனே!இறுதியில் ஃபிர்அவனுடன் சேர்ந்து இவனும் அழிந்தொழிந்தான்.
03/03/2011 01:22:25
mohamed
Please retype the anti-spam code "6812"
அவர் தம் இச்சைப்படி (எதையும்) பேசுவதில்லை. அது அவருக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டதேயன்றி வேறில்லை. அல்குர்ஆன் 53:3-4
Name
Email
Comment
Or visit this link or this one