Put some informations about your eshop here (address, contacts etc.)

இப்றாஹீம் நபி சந்தித்த சோதனைகள்!

2: 124-வது வசனத்தில் வரும் ”கலிமாத்” என்ற சொல்லுக்கு சோதனைகள் என விளக்கமளித்த இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்:-

1. தனிமை: தம்முடைய சமூகத்தாரை விட்டுப் பிரிந்து செல்லுமாறு அவர்களுக்கு உத்தரவிட்டபோது அல்லாஹ்வுக்காக அவர்களைப் பிரிந்து சென்றது.

2. ஏகத்துவப்பிரச்சாரம்: நம்ரூத் அரசனை எதிர்த்து ஓரிறைக் கொள்கையை உறுதியுடன் முழங்கியதால் இப்றாஹீம் (அலை) அவர்கள் பேராபத்தைச் சந்தித்தார்கள்.அந்நிலையிலும் அந்த சர்வாதிகாரியுடன் அல்லாஹ் விசயத்தில் விவாதம் செய்தார்கள்.( நமரூத் (இராக்-பாபிலோன் அரசன்)உலகம் முழுவதையும் ஒரே நேரத்தில் ஆட்சி செய்த நால்வரில் ஒருவன்.இப்றாஹீம்(அலை)அவர்களுக்கு கடும் துயரங்களக் கொடுத்து வந்த அந்த சர்வாதிகாரி யிடமிருந்து அவர்களை அல்லாஹ் காப்பாற்றினான்.)

3. பொறுமை: உயிருடன் எரித்துக் கொன்றுவிடுவதற்காக அவர்களை அந்த நம்ரூத் எனும் கொடியவன் நெருப்பில் தூக்கி வீசியபோது அந்தப் பேராபத்தை ஏற்றுச் சகித்தது.

4. நாடுதுறத்தல்: அதன் பின்னர் தங்களை விட்டுப்பிரிந்து செல்லுமாறு நம்ரூத் எத்தரவிட்டபோது, அல்லாஹ்வுக்காக தமது ஊரிலிருந்தும், தாயகத்திலிருந்தும் நாடு துறந்து ஹிஜ்ரத் சென்றது. ( அதாவது இராக்கை துறந்து மற்றும் எகிப்துக்குச் செல்லுமாறு இப்றாஹீம் (அலை) அவர்களுக்கு இறைவன் கட்டளையிட்டான். சொந்த மண்ணை விட்டு அந்நிய மண்ணில் வாழ்நாளைக் கழிப்பது எளிதன்று. ஆனால், இறைக்கட்டளையை ஏற்றுத் தமது துணைவியார் சாரா,சகோதரர் மகன் நபி லூத்(அலை) ஆகியோருடன் இப்றாஹீம்(அலை) அவர்கள் அயலகம் சென்றார்கள்)

5. தயாளம்: விருந்தினரை உபசரிக்குமாறு அவர்களுக்குக் கட்டளை யிடப்பட்டது. அதை ஏற்று உடலாலும்,பொருளாலும் அதற்காக உழைத்தது.

6. தியாகம்: தம்முடைய புதல்வர் இஸமாயீலை அறுத்துப்பலியிடுமாறு அவர்களுக்க உத்தரவிப்பட்டபோது அவரை அறுப்பதற்குத் துணிந்தது ஆகியனவாகும்.

அல்லாஹ்விடமிருந்து வந்த இந்தச் சோதனைகள் அனைத்தையும் இப்றாஹீம் (அலை)அவர்கள் வெற்றிகரமாக சந்தித்தபோது அந்தச் சோதனைகளிலிருந்து அவர்களை அல்லாஹ் காப்பாற்றி,” நீர் (எமக்கு) அடிபணிவீராக” என்று கூறினான். அதற்கு அவர்கள் ” அகிலத்தாரின் இறைவனுக்கே நான் அடிபணிந்தேன் (12:13) என்று கூறினார்கள். இதை முஹம்மது பின் இஸ்ஹாக்(ரஹ்) அவர்கள் அறிவித்துள்ளார்கள். (ஆதாரம் இப்னு கதீர்)
03/03/2011 01:46:11
mohamed
Please retype the anti-spam code "1633"
அவர் தம் இச்சைப்படி (எதையும்) பேசுவதில்லை. அது அவருக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டதேயன்றி வேறில்லை. அல்குர்ஆன் 53:3-4
Name
Email
Comment
Or visit this link or this one